மண்டபங்களை சிகிச்சை மையமாக்குங்க - திருப்பூர் கலெக்டரிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை

திருப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திருமண மண்டபங்களை சிகிச்சை மையங்களாக்க வேண்டும் என்று, வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார், கலெக்டரிடம் மனு அளித்தார்.

Update: 2021-05-28 07:57 GMT

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவ வருகிறது. கடந்த சில நாட்களாக 1500 பேருக்கு மேல் இருந்த நிலையில், தற்போது தினசரி  2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவி வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் 500 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், திருப்பூரில் கிராமப்பகுதியில் தொற்று அதிகம் உள்ள பகுதியில், திருமண மண்டபங்களை சிகிச்சை மையங்களாக மாற்ற வேண்டும் என, திருப்பூர் வடக்கு தொகுதி (அதிமுக) எம்எல்ஏ விஜயகுமார், கலெக்டர் விஜய்கார்த்திகேயனிடம் மனு அளித்தார்.

திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராமப்பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்களை சிகிச்சை மையங்களாக ஏற்பாடு செய்து, டாக்டர்களை நியமித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News