நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை: திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனர் உறுதி

திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கிராந்திகுமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

Update: 2021-06-13 16:22 GMT

திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்ட கிராந்திகுமார்.

திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சிவக்குமார், பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அப்பணியிடத்துக்கு, பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த கிராந்திகுமார், நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கிராந்திகுமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். மாநகராட்சி பகுதிகளில் பொது மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்றார்.

Tags:    

Similar News