பிரச்சினைகளை ஆன்லைன் வாயிலாக தெரிவிக்கலாம்: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர்

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள பிரச்சினைகளை பொதுமக்கள் ஆன்லைனில் புகார் செய்யலாம் என்று, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-16 16:33 GMT

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், சுகாதார அலுவலகத்தில் தற்காலிக பணியாளர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகராட்சி சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஆன் லைன் மூலமாக புகார் செய்யலாம் என மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பொறுப்பேற்ற பிறகு, மாநகராட்சி பகுதியில் உள்ள மீன் மார்க்கெட், தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். திருப்பூர் மாட்டுக்கொட்கை பகுதியில் சுகாதார அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார்.

அத்துடன், திருப்பூர் மாநகராட்சி நான்கு மண்டலங்களிலும் வசிக்கும் பொது மக்கள் தங்கள் சார்ந்த பகுதியின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பான சந்தேகங்களை, மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை, 0421,-2237851, தொடர்பு கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார். ஆய்வின் போது செயற்பொறியாளர் முகமதுசலியுல்லா, சுகாதார அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News