திருப்பூர் மாவட்டத்தில் 647 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், மேலும் 647 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.;

Update: 2021-05-12 14:59 GMT

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா  பாதிப்பு நாளுக்கு நாள்  அதிகரித்து வருவது  வருகிறது.  கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பின் வேகம்  தினசரி 5௦௦-க்கு மேல் கடந்து செல்கிறது.
கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு இடங்களில்  சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு இருந்த போதிலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பலர் சிகிச்சை பெற முடியாமல் மருத்துவமனையை தேடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, திருப்பூர் மாவட்டம் முழுவதும் 647 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரேநாளில் 3பேர் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம்,  33 ஆயிரத்து 180பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News