திருப்பூர் மாநகராட்சியில் பகுதியில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி சுகாதார துறையினர் பல்வேறு ந டவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாஸ்க் அணியாமல் செல்வோருக்கு சுகாதார துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். மாநகர பகுதியில் மாஸ்க் அணியாமல் சென்ற 32 பேருக்கு அபராதம் மற்றும் விதிமுறை மீறியதாக 24 தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் என ரூ.31 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது..