திருப்பூர் மாநகராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது
திருப்பூர் மாநகராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று, மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.;
திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில், திருப்பூர் டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலையம், 15 வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், அண்ணா நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம், நெருப்பெரிச்சல் ஆரம்பசுகாதார நிலையம் உள்ளிட்ட 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 34 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.
இந்த நிலையில், பெரும்பாலான மையங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தால், நாளை வெள்ளிக்கிழமையன்று, தடுப்பூசி போடும் பணி நடைபெறாது என்று, திருப்பூர் மாநகராட்சி சார்பில் அறிவி்க்கப்பட்டு உள்ளது.