திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப்பணி -கமிஷனர் கிராந்திகுமார் திடீர் ஆய்வு..!
திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் மாஸ்க் கிளீனிங் பணியை கமிஷனர் கிராந்திகுமார் திடீரென ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகம் சென்று துப்புரவு பணியாளர்கள் வருகைப் பதிவேடு மற்றும் பணியாளர்கள் வருகை நேரம் பணி விவரம் பற்றி கேட்டறிந்தார்.மேலும் காய்ச்சல் கண்டறியும் கொரோனா முன் களப்பணியாளர்கள் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். பணியாளர்களிடம் அரசு வழிகாட்டுதலின்படி பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது மண்டலம் கோவிட் சென்டரை ஆய்வு செய்து பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணியையும் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் மாலை 02.30 மணி அளவில் 4 மண்டலங்களிலும் நடைபெற்று வந்த மாஸ் கிளீனிங துப்புரவு பணியை ஆய்வு செய்து பார்வையிட்டார்.
மூன்றாவது மண்டலம் 43 வது வார்டு குமாரசாமி காலனி பகுதியில் நடைபெற்று வந்த துப்புரவு பணியை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து குமரன் பூங்காவையும் பார்வையிட்டார். ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.