ஊரடங்கிலும் அடங்கல! திருப்பூரில் 605 வாகனங்கள் பறிமுதல்
திருப்பூரில், ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றியவர்களிடம் இருந்து 605 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவி, மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. இதனை தடுக்க, தமிழக அரசு தளர்வுகள் அற்ற ஊரடங்கை பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வாகனத்தில் சுற்றுவோரை கண்காணித்து, போலீசார் அபராதம், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
திருப்பூர் நகரில், ஊரடங்கு விதிமீறல் குறித்து, பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், தேவையில்லாமல் ஊர் சுற்று ம் நபர்களை நிறுத்தி அவர்களிடம் அபராதம் விதிக்கின்றனர். மீண்டும் மீண்டும் சிக்குவோரிடம் டூவீலர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் 426, மாநகரில் மட்டும் 173 டூவீலர் , 6 நான்கு சக்கர வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.