திருப்பூரில் இன்று 655 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
திருப்பூரில் இன்று 655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 3 பேர் இறந்துள்ளனர்.;
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. சுகாதார துறையினர்பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டாலும், பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 29 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்து 563 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில், இன்று சுகாதார துறை அறிவிப்பின் படி, மாவட்டம் முழுவதம் 655 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் இறந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 451 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது3032 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.