திருப்பூரில் விதிமீறி செயல்பட்ட 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
திருப்பூரில் விதிமீறி செயல்பட்ட 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிரித்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. பரவலை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக 3 ஆயிரம் சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
திருப்பூர் குமரன்சாலையில் உள்ள 2 ஜவுளி கடைகள் ஊரடங்கை மீறி செயல்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் புகார் சென்றது. புகாரை தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள், குமரன் சாலைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையை பின் பகுதியில் திறந்து, ஜவுளி வியாபாரம் செய்தது கண்டறியப்பட்டது. ஊரடங்கை மீறி செயல்பட்டதால், இரண்டு ஜவுளி கடைகளுக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.