7.5% இட ஒதுக்கீடு 436 மாணவர்கள் மருத்துவராகின்றனர்: அமைச்சர் செங்கோட்டையன்
7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது இந்திய வரலாற்றில் தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டதன் மூலமாக இன்றைக்கு 436 மாணவர்கள் மருத்துவர்களாக வருகின்றனர். திருப்பூர் அருகே பள்ளி விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.;
திருப்பூர் அருகே மங்கலம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்ட துவக்க விழா நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் துவக்கி வைத்தனர் இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது விவசாயிகளின் கண்ணீரை துடைக்கும் வண்ணம் இந்த அரசானது 12ஆயிரத்தி 100 கோடி ரூபாய் வழங்கி வரலாறு படைக்கும் வண்ணமாக இந்த அரசானது செயல்பட்டுள்ளது எனவும், தொலைநோக்கு சிந்தனையோடு இந்த அரசு செயல்பட்டு வருகிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது இந்திய வரலாற்றில் தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு இன்று வழங்கப்பட்டதன் மூலமாக இன்றைக்கு 436 மாணவர்கள் மருத்துவர்களாக வருகின்ற வரலாறு தற்போது தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார். தொலைநோக்கு சிந்தனையோடு இந்த அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் இதனால் ஸ்டாலின் போன்ற எதிர்க்கட்சியினர் பேசி வருவதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று தெரிவித்தார்.