திருப்பூர் ஜி.எச்- இல் 6000 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன் டேங்க் அமைப்பு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் 6000 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன் டேங்க் அமைப்பு
திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில், 150 முதல் 220 கொரொனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தனித்தனி வார்டு மூன்று இடங்களில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு, ஏற்கனவே 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் டேங்க் உள்ளது.
கொரோனா தொற்றின் ௨ம் அலை காரணமாக, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் முழுவதும், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, 22 பேர் பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான அளவு அக்ஸிஜன் மருத்துவமனையில் உள்ளது.
இருப்பினும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும், கூடுதலான பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு தேவையான அளவு அக்ஸிஜன் வழங்கும் வகையிலும், திருப்பூர் அரசு மருத்துவமனையில் 6 லிட்டர் கொள்ளளவு திரவ ஆக்ஸிஜன் இருப்பு வைக்கும் வகையிலான டேங்க் அமைக்கும் பணி நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பிரச்னை ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக டேங்க் நிறுவப்பட்டுள்ளதாக, திருப்பூர் மருத்துவமனை முதல்வர் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.