திருப்பூர் மாநகராட்சியில் 2 வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு ஏற்பாடு

திருப்பூர் மாநகராட்சியில், 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-06-29 13:43 GMT

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. துவக்கத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடம் ஆர்வம் குறைந்திருந்தாலும், தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால், பல தடுப்பூசி மையங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற முடியாமலும், தடுப்பூசி செலுத்த முடியாமலும், மக்கள் ஏமாற்றத்திற்குள்ளாகி வருகின்றனர். அத்துடன், 1 வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்கள், 2 வது டோஸ் போட்டுக்கொள்ள காலதாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையில்,  திருப்பூர் மாநகராட்சியில் 2 வது டோஸ் போட்டுக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவேக்சின் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 2 வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாநகராட்சியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் நேரில் பதிவு செய்யலாம்; அல்லது 0421–2240852,0421–2237852 ஆகிய தொலைப்பேசி எண்களில்,  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முன்பதிவு செய்யலாம் என மாநகராட்சி  நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Tags:    

Similar News