திருப்பூரில் கொரோனா பரிசோதனை செய்ய 20 இடம்

திருப்பூரில் 20 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாநகரட்சி சுகாதார துறையினர் தெரிவித்தனர்.;

Update: 2021-05-08 17:30 GMT

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை 29 ஆயிரத்து 865 பேர் பாதிக்கப்பட்டதில், 26 ஆயிரத்து 794 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

249 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சுகாதார துறையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை செய்து பயன்பெறலாம் என சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது குறித்து சுகாதார துறையினர் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சியில், நெசவாளர்கள் காலனி, எம்ஜிஆர் நகர், சூசையாபுரம், மேட்டுபாளையம், கேவிஆர் நகர், டிஎஸ்கே நகர், பிஆர்எம்எச் நகர், வீரபாண்டி, நெருப்பெரிச்சல், மண்ணரை, கருவாயூரப்பன் நகர், அண்ணா நெசவாளர் காலனி, பெரியாண்டிபாளையம், கோவில்வழி, 15 வேலம்பாளையம், நல்லூர் , கண்டமேடு ஆகிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மேட்டுபாளையம் மாநகராட்சி நடுநி்லைப்பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 20 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்படுகிறது.

இது தவிர, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருப்பூர் சேவா சமிதி திருமண மண்டபம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குமரன் மகளிர் கல்லூரி, செயிண்ட் ஜோசப் கல்லூரியில் சித்தா பிரிவு, குலாலர் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்படுகிறது, என்றனர்.

Tags:    

Similar News