கொலை முயற்சி வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்!

திருப்பூரில் இளைஞரை கொலை செய்ய முயன்ற 2 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2021-05-29 12:40 GMT

திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட செல்லம்மாள் காலனி மசூதி ரோட்டில் ஏப்ரல் 14, ம் தேதி ராம்பிரபு, 26,என்பவரை ஒரு கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தது.

இந்த வழக்கில், சேலம் பழைய சூரமங்கலத்தை  சேர்ந்த ஹரிஹரன்,21, கொண்டலாம்பட்டி பைபாஸ், தம்மநாய்க்கன்பட்டியை சேர்ந்த பழனியாண்டி,24, ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதில், ஹரிகரன் மீது அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வழக்கும், பழனியாண்டி மீது 15 வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வழக்கும் உள்ளது.

இதனிடையே, குற்றச்சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால்,  இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி, கோவை சிறையில் உள்ள இருவருக்கும், ஒரு ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News