தேர்தல் விதிகள் அமல்படுத்துவதில் பாரபட்சம் -இ.கம்யூ புகார்

Update: 2021-03-01 10:15 GMT

திருப்பூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலரான விஜயகார்த்திகேயன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான சட்டமன்ற தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் திமுக , அதிமுக , காங்கிரஸ் , பாஜக , கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

தேர்தல் விதிமுறைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்ட பின்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில் அரசியல் கட்சியினரின் விளம்பர பதாகைகளை அகற்றுவதில் தேர்தல் அலுவலர்கள் பாரபட்சம் காட்டுவதாகவும் அதிமுகவின் விளம்பர பதாகைகள் இன்னும் அகற்றப்படாமல் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பார்வையில் படும்படி இருப்பதாக குற்றம் சாட்டினர்.

இதற்கு அதிமுக சார்பில் பதிலளிக்க முற்பட்ட போது இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை அடுத்து ஆலோசனைக் கூட்டம் சுமூகமாக நடைபெற்றது.

Tags:    

Similar News