திருப்பூரில் கல்லூரிகள் செயல்பட துவங்கின

திருப்பூரில் கொரணா ஊரடங்கால் 10 மாதங்கள் கழித்து முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரிகள் செயல்பட துவங்கின;

Update: 2021-02-08 08:09 GMT

கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாமல் மூடிக்கிடந்தன . இந்நிலையில் ஏற்கனவே தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த சூழ்நிலையில் இன்று முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரிகள் துவங்கின. கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு முதற்கட்டமாக உடல் வெப்பநிலை பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட பின்னர் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Similar News