திருப்பூரில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் போயம்பாளையம் அவிநாசி நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் அவரது நண்பர்களுடன் நேற்றிரவு போயம்பாளையம் சக்தி நகர் விநாயகர் கோவில் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சதீஷ் தான் வைத்திருந்த பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது சக நண்பர்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.