திருப்பூர் : இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
திருப்பூர் : இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வெளியிட்டார்.;
அங்கரீக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் மற்றும் பலர் முன்னிலையில் திருப்பூரில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வெளியிட்டார். அதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 23 லட்சத்து 52 ஆயிரத்து 785 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்களர்களாக 11 லட்சத்து 63 ஆயிரத்து 767 பேரும் ,
பெண் வாக்காளர்களாக 11 லட்சத்து 88 ஆயிரத்து 733 பேரும் ,
மூன்றாம் பாலினத்தவர்களாக 285 பேரும் உள்ளனர்.
21772 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
புதிதாக 70715 பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.