ஹெல்மெட் முக கவசம் அணிந்தவர்களுக்கு பாராட்டு
திருப்பூரில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட் மற்றும் முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.;
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை சார்பாக 32வது சாலை பாதுகாப்பு மாதம் இன்று முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக அவிநாசி சாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை துவக்கி வைத்தார். அவிநாசி சாலையில் முகக்கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகம் செய்தார்.