சமையல் செய்தபோது தீப்பிடித்து பெண் பலி
ஊத்துக்குளி அருகே, சமையல் செய்தபோது ஆடையில் தீப்பிடித்து பெண் பலி;
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பழைய காங்கேயம் ரோடு பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகள் பிரீத்தி,27. திருமணமானவர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தனது தந்தை வீட்டில் சமையல் செய்தபோது, அவரது ஆடையில் தீப்பிடித்தது. அதில் காயமடைந்த பீரித்தி, கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஊத்துக்குளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.