100 படுக்கையுடன் கொரோனா வார்டாக மாறும் திருப்பூர் அரசுப்பள்ளி!

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 100 கொரோனா படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2021-04-26 11:24 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை, அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க,  தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சுகாதாரத்துறையினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடுமலை அரசு கலைக்கல்லூரி, அவிநாசியில் உள்ள தனியார் கல்லூரி, திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள மண்டபம், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட இடங்களில், கொரோனா நோயாளிகளுக்கென படுக்கை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது கூடுதலாக, திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 படுக்கை வசதி அமைக்க சுகாதார துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News