திருப்பூர் மாவட்டத்தில் இன்று 608 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 608 ஆக உள்ளது.;
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 24, ம் தேதி கொரோனா வேகம் 2, ஆயிரத்தை கடந்து மிக அதிகளவில் இருந்தது. பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக படிப்படியாக, பெருந்தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பின்னலாடை நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்களில் 25, சதவீத பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டு, பணி நடக்கிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 608, ஆக குறைந்து உள்ளது. இது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள பட்டியலில், திருப்பூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 608, ஆகவும், இறப்பு எண்ணிக்கை 10, ஆகவும் உள்ளது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் 76, ஆயிரத்து, 702,பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 64, ஆயிரத்து 685, பேர் குணமடைந்துவீடு திரும்பி உள்ளனர்.656, பேர் இறந்து உள்ளனர். மாவட்டத்தில் தற்போது 11, ஆயிரத்து 361, சிகிச்சையில் உள்ளனர்.