சாக்கடை துர்நாற்றம் - சங்கடப்படும் மக்கள்: திருப்பூர் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் மனு!
திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டில் சாக்கடைப் பிரச்னையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை சரி செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டில், சாக்கடையை தூர்வாரி, சரி செய்ய வேண்டும் என்று, மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டல அலுவலகத்தில் அக்கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், திருப்பூர் மாநகராட்சி 5 வது வார்டுக்குட்பட்ட நேதாஜி வீதி, வீரமாருதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் 200 க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாக்கடைகள் தூர் வாரப்படாமல் மண்மூடி அடைத்து கிடக்கிறது.
இதனால்வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் பெருகி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பைகளும் அகற்றப்படாமல் இருப்பதால், அவை காற்றில் பறந்து வீடுகளுக்குள் விழுகின்றன. சாக்கடை தேங்கி நிற்பதால் அப்பகுதியே துர்நாற்றம் வீசுகிறது.
எனவெ, சுகாதார நீர்கேட்டு வழிவகுக்கும் சாக்கடையை தூர்வார வேண்டும். குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி, துப்புரவுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.