திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 781 ஆக சரிவு!

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, 781 ஆக குறைந்துள்ளது.

Update: 2021-06-14 15:02 GMT

திருப்பூர் மாவட்டத்தில் ஆரம்பத்தில், கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக இருந்தது. அரசு மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலனாக, பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது.

கடந்த சில நாட்களகா திருப்பூர் மாவட்டத்தில் தொற்று எண்ணிகையில் குறிப்பிடத்தக்க சரிவு இருந்து வருகிறது. நீண்டநாட்களுக்கு பிறகு  இன்று கொரோனா பாதிப்பு 800,க்கும் கீழ் சென்றது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில், திருப்பூர் மாவட்டத்தில் 781,பேர் பாதிக்கப்பட்டதாகவும், 8, பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாவட்டம் முழுவதும் 75, ஆயிரத்து 369, பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60, ஆயிரத்து 340, பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 642, பேர் இறந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 14, ஆயிரத்து 387, பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags:    

Similar News