திருப்பூரில் 1697 பேருக்கு கொரோனா: 20 பேர் பலி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று, 1697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 20 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-05-29 13:58 GMT

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் தாக்கம் இன்னமும் குறைந்தபாடியில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த, தனி அதிகாரியாக வேளாண் துறை  செயலாளர் சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

எனினும், கொரோனா பரவல் வேகம் இன்னமும் குறையாமல், கடந்த ஒரு வாரமாக 1500 க்கு மேல் காணப்படுகிறது. மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, திருப்பூர் மாவட்டத்தில் இன்று,  1697 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 20 பேர் பலியாகி உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி திருப்பூர் மாவட்டத்தில் 58 ஆயிரத்து 54 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.39 ஆயிரத்து 980 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.17 ஆயிரத்து 628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.446 பேர் பலியாகி உள்ளனர்.

இதனிடையே, கொரோனா வேகமாக பரவும் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார். திருப்பூரில் குமரன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து, அங்கு சிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்த விவரத்தை கேட்கிறார்.

Tags:    

Similar News