அடைத்து வைக்கப்பட்ட 19 பெண் தொழிலாளர்களை சமூக நலத்துறை மீட்பு
திருப்பூரில் அடைத்து வைக்கப்பட்ட 19 வட மாநில பெண் தொழிலாளர்களை சமூக நலத்துறையினர் மீட்டனர்.;
திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் செயல்படும் தனியார் பின்னலாடை நிறுவனத்தில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 19 பெண்கள் பின்னலாடை பயிற்சிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் வந்தனர்.
பயிற்சி முடிந்த பிறகு, வேறு நிறுவனத்தில் வேலை செய்ய பெண்கள் விரும்பியதாக தெரிகிறது. இதனால், பெண்களின் செல்போன்களை பறித்து தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு அடைக்கப்பட்டிருந்த 19 பெண்களை மீட்டனர்.