நடப்பு நிதியாண்டில் ரூ.30 லட்ம் கோடி வர்த்தக ஏற்றுமதி இலக்கு நிர்ணயம்: ஏஇபிசி தகவல்

நடப்பு நிதியாண்டில் ரூ.30 லட்ம் கோடி வர்த்தக ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக ஏஇபிசி., தெரிவித்து உள்ளது.;

Update: 2021-07-04 13:45 GMT

திருப்பூர் ஏப்ரல்–ஜூன் காலாண்டு நிதியாண்டில் ரூ.7 லட்சம் கோடியை வர்த்தக ஏற்றுமதி எட்டியதற்கு ஏற்றுமதியாளர்களுக்கு ஏஇபிசி பாராட்டு தெரிவித்து உள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக அகில இந்திய தலைவர் சக்திவேல் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:

ஏப்ரல்,ஜூன் காலாண்டு நிதி ஆண்டில் 2021–22 இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.7 லட்சம் கோடி வர்த்தக ஏற்றுமதியை எட்டியதற்காக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அரசையும், இந்திய ஏற்றுமதியாளர்களையும் பாராட்டுகிறோம். பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவையில் குறிப்பாக நிதி, வர்த்தகம் மற்றும் ஜவுளி அமைச்சர்கள் ஆகியோரின் ஆற்றல் மிக்க தலைமைக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த நிதி ஆண்டில் 2021–22 ரூ.30 லட்சம் கோடி வர்த்தக ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பொருளாதார மீட்சி கடந்த உடன் ஒப்பிடும்போது, ஜூன் 2021 ல் பருத்தி நூல், துணிகள், தயாரிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி 50.86 சதவீதம் அதிகரித்து உள்ளது. இருப்பினும் பல முக்கியமான மாநிலங்களில் கொரோனா காரணமாக நல்ல ஆர்டர்கள் இருந்த நிலையில், ஆடை ஏற்றுமதி பெரிதும் பயன்பெறவில்லை. பொருளாதாரம் மீண்டு வருவதால் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் விரைவாக முந்தைய நிலைக்கு வரும் நடப்பாண்டு செப்டம்பர் 30 வரை மேலும் 3 மாதங்களுக்கு மற்றும் பிந்தைய ஏற்றுமதி ரூபாய் கடனுக்கான வட்டி சமநிலைப்படுததுதல் திட்டத்தை நீடித்த அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இதுபோல் 2021 ஜனவரி முதல் நிலுவையில் உள்ள ஆர்ஓஎஸ் எல் உடனடியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம், என தெரிவித்து உள்ளார்.

Similar News