ஆயத்த ஆடை துறையை சேவை துறையாக அறிவிக்க கோரிக்கை

Update: 2021-04-13 17:37 GMT

ஆயத்த ஆடை துறையை சேவை துறையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏஇபிசி.,தலைவர் சக்திவேல், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:

குறு, சிறு, தடுத்தர நிறுவனங்கள் நாட்டின் முதுகெலும்பாக உள்ளன. இத்தொழில் நிறுவனங்கள் மூலம் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த 1.30 கோடி தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

கொரோனா 2 வது அலை வீச துவங்கி உள்ளது. கொரோனா பரிசோதனை, தடுப்பூசி போடும் பணிகளை அரசு வேகப்படுத்தி இருப்பது வரவேற்கதக்கது. கொரோனா பாதிப்பில் இருந்து, ஆடை உற்பத்தி துறை தற்போது தான் மீண்டும் துவங்கி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்திய ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர் கிடைத்து வருகிறது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், ஆடை உற்பத்தி துறை வீச்சியை சந்திக்கும். அதிகளவில் தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலை, அத்தியாவசிய சேவை துறையாக அறிவிக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து தடையின்றி இயங்க அனுமதி அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News