பொறியாளருக்கு கொரோனா: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடல்
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அலுவலகம் தற்காலிமாக மூடப்பட்டது.;
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும், நாளை முதல் மளிகை கடைகள், காய்கறி கடைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். இறைச்சி கடைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறான நிலையில், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஈரோட்டை சேர்ந்த பொறியாளருக்கு கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல் இருந்ததால், கொரோனா சோதனை செய்தார். அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் காரணமாக அலுவலகம் 3 நாட்கள் மூடப்பட்டது. மேலும், அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதார துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.