தரமற்ற அரிசி: உணவுத்துறை அமைச்சருக்கு திருப்பூர் மார்க்சிஸ்ட் செயலாளர் கடிதம்
திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று, உணவுத்துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, மார்க்சி்ஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் அரிசி, உணவு தயாரிப்பதற்கு ஏற்றதாக இல்லை. மிகவும் மோசமாக உள்ளது. கடந்த ஆட்சியின்போது டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்டு தர நிர்ணயம் செய்யப்படாத அரிசி தற்போது உணவு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் அடைகின்றனர். எனவே, மாநில அரசு தலையிட்டு தரமற்ற அரிசியை திரும்பப் பெற்று, உடனடியாக சமைப்பதற்கு ஏற்ற வகையில் தரமான அரிசியை ரேஷன் கடைகள் மூலம், பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று, தெரிவித்துள்ளார்.