பின்னலாடை நிறுவனங்களுக்கு லீவு
திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் 24 ம் தேதி வரை மூடப்படுவதால், வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல துவங்கி உள்ளனர்
திருப்பூரில் ஆயிரக்கணக்கான பனியன் நிறுவனங்கள் செயல்படுகிறது. இந்த நிறுவனங்களில் வடமாநிலத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
திருப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 ம்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், பின்னாலடை நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள், தங்கள் நிறுவன அடையாள அட்டையை காண்பித்து, வேலைக்கு சென்று வந்தனர்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக தொழில் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 24 ம் தேதி வரை பனியன் நிறுவனங்களை மூடுவது என முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில்ேவ ஸ்டேஷனில் டிக்கெட் முன் பதிவு செய்து வருகின்றனர்.
இதனால் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனின் நீண்ட கியூ வரிசையில் வடமாநிலத்தினர் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.