'திறக்க வேணாம்னா தெறக்கிறீங்க?' பனியன் கம்பெனிக்கு சீல்

கொரோனா விதிமுறைகளை மீறியதாக திருப்பூரில் பனியன் நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.;

Update: 2021-05-18 14:58 GMT

திருப்பூர்  மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதை தொடர்ந்து பனியன் கம்பெனிகளுக்கு24ம் தேதி வரை லீவு விடப்பட்டு உள்ளது.

இந்நிலையில்  எல்ஆர்ஜி அரசு பெண்கள் கல்லூரி அருகே ஒரு பனியன் ஏற்றுமதி நிறுவனம்  செயல்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு  தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது நிறுவனத்திற்குள் வேலை நடந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும், நிறுவனத்திற்குள் சமூக இடைவெளி இல்லாமல் இருந்ததற்காக ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News