திருப்பூர்: தொற்று 880;பலி 5

திருப்பூரில் 880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-05-17 14:45 GMT

திருப்பூர் மாவட்டம் தொழில் ரீதியான மாவட்டம் என்பதால், மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதியாக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது.

திருப்பூர், தாராபுரம், காங்கயம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், அவிநாசி என அனைத்து பகுதியில் சராசரியாக 50 க்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்படுகின்றனர். இன்று சுகாதார துறை வெளியிட்ட பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் 880 பேருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தற்போது வரை 37 ஆயிரத்து 480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்து 921 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 6279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 280 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News