கொரோனாவால் இறந்தவர்கள் உடலை தகனம் செய்யும் திருப்பூர் பாஜகவினர்!

திருப்பூரில், கொரோனாவால் இறந்த 6 பேரின் உடல்கள், பாஜக சார்பில் இலவசமாக தகனம் செய்யப்பட்டது

Update: 2021-06-03 12:47 GMT

திருப்பூரில், கொரோனாவால் இறந்தவர்களின் சலடங்களை தகனம் செய்த பாஜகவினர்.

திருப்பூரில் கொரோனா பரவல், தற்போது சற்று குறையத் தொடங்கி உள்ளது. இருப்பினும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தினமும் 15 முதல் 20 பேர் வரை இறக்கின்றனர்.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை,  அவர்களது  உறவினர்கள் பெற்றுக் கொண்டு, இறுதிச் சடங்கு செய்கின்றனர். ஒரு சில நோயாளிகளின் உடல், உறவினர்களிடம் வழங்கப்படாமல், நேரடியாக அடக்கம் அல்லது தகனம்  செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு, நேரடியாக இறுதிச் சடங்கு செய்ய வேண்டிய கொரோனா நோயாளிகளின் உடல்களை பெற்று, திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில்,  இலவசமாக அடக்கம் அல்லது தகனம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூறுகையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, சிகிச்சை இறந்தவர்களின் உடல்களை, சிலரால் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம், அவர்களின் குடும்பத்தினரும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

அதேபோல் வெளியூரில் இருந்து வந்து திருப்பூரில் சிகிச்சை பெற்று இறந்தவரின் உடலைப்பெற உறவினர்கள் இங்கு வர இயலாத சூழலில், அதுபோன்ற உடல்களை, அவர்களின் குடும்பத்தினரின் அனுமதி பெற்று, தகனம் செய்கிறோம். இதுவரை 6 உடல்களை தகனம் செய்து உள்ளோம்  என்றனர்.

Tags:    

Similar News