பிரண்டிங் தொழிலாளிக்கு கத்திக்குத்து
திருப்பூரில், தகராறில் பிரண்டிங் நிறுவனத் தொழிலாளி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.;
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ்,23. இவர், திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் கார்த்தி,30. பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், அப்போது பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை பார்க்கும் செல்வகுமார்,29 என்பவர் சமரசம் செய்து வைத்தார்.
இந்நிலையில், இரவு நேரத்தில் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில், செல்வகுமார் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அங்கு வந்த பாக்யராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வகுமாரை குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார். அவரை , 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.