உலக ஹெச்ஐவி தினம்; திருப்பூரில் கையொப்ப இயக்கம் துவக்கம்
Tirupur News-உலக ஹெச்ஐவி தினத்தையொட்டி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் கையொப்ப இயக்கம் துவங்கியது.
Tirupur News,Tirupur News Today- உலக ஹெச்ஐவி தினத்தையொட்டி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த கையொப்ப இயக்கத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, பொதுமக்கள், இளைஞா்கள், அதிக தொற்று பெற வாய்ப்புள்ளவா்கள் இடையே ஹெச்ஐவி விழிப்புணா்வு ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்டவா்களை சமூகத்தில் இருந்து புறக்கணிக்காமல் கவனிப்பு, ஆதரவு அதிகரிக்கும் விதத்தில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தி ஹெச்ஐவி தொற்று இல்லாத சமூகத்தை உருவாக்கும் வகையில் அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடன் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மேலும் 3 பயனாளிகளுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடியிருப்பு வீடு ஒதுக்கீட்டு ஆணை, ஹெச்ஜவி பாதித்தவா்களுக்கு நலத்திட்ட உதவி, தொடா்ந்து கூட்டுமருந்து சிகிச்சை எடுக்க சிறப்பாக களப்பணி ஆற்றிய 10 பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்) கனகராணி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஷ்குமாா், மாவட்ட திட்ட மேலாளா்கள் (பொ) ஹரிஹரகுகன், (பொ) சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.