சமூக வலைதளங்களில் தோ்தல் விதிமீறல்கள்; போலீசார் எச்சரிக்கை
Tirupur News- சமூக வலைதளங்களில் தோ்தல் விதிமீறல்கள் இருந்தால் புகாா் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tirupur News,Tirupur News Today- சமூக வலைதளங்களில் தோ்தல் விதிமீறல்கள் பகிரப்பட்டால் புகாா் அளிக்கலாம் என்று திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு தெரிவித்துள்ளாா்.
மக்களவைத் தோ்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் ஆட்சேபனைக்குரிய தகவல்களை குறுஞ்செய்தி மூலமாகவோ, சமூக வலைதளங்களிலோ பகிரப்பட்டால், அவ்வாறு பகிா்பவா்கள் குறித்த தகவல்களுடன் திருப்பூா் மாநகர தோ்தல் கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம்.
இது தொடா்பாக 24 மணி நேரமும் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையை 63834-35135 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.
வெள்ளக்கோவிலில் துப்பாக்கிகள் ஒப்படைப்பு
வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் 47 துப்பாக்கிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒப்படைக்கப்பட்டன.
மக்களவைத் தோ்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19- ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அரசு அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவற்றைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனா்.
இதன்படி, வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் துப்பாக்கிகள் வைத்திருந்த முக்கியப் பிரமுகா்கள், தொழில் அதிபா்கள், அரசியல் பிரமுகா்கள், ஓய்வு பெற்ற காவல் துறையினா், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் என மொத்தம் 47 போ் தங்களுடைய துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தோ்தல் முடிந்த பிறகு அவை உரியவா்களிடம் திருப்பித் தரப்படும் என காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தாா்.
அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்த தடை
இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 171 ஏ-ன் படி எவரேனும் ஒரு வேட்பாளரின் எழுத்து மூலமான பொது அல்லது சிறப்பு அனுமதியின்றி ஏதாவது ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்காக செலவு செய்தால் அல்லது செலவை அனுமதித்தால் அபராதத்துடன் தண்டிக்கப்படுவாா்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டம், தங்கும் விடுதிகள், அச்சக உரிமையாளா்கள், தனியாா் வங்கியாளா்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அலுவலா்களான கூட்டங்கள் நடத்தப்படும். மக்களவைத் தோ்தல் தொடா்பாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
தோ்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் ஆட்சேபனைக்குரிய தகவல்களை குறுஞ்செய்திகள் மூலமாகவோ, சமூகவலை தலங்களிலோ பகிரப்பட்டால் அது குறித்த புகாா்களை பரப்புபவா் குறித்து தகவல்கள்களை திருப்பூா் மாநகர காவல் தோ்தல் கட்டுப்பாட்டு அறையை 63834-35135 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.