நாளை கருப்பு சட்டை அணிந்து, கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம்; திருப்பூர் தொழில்துறை முடிவு

Tirupur News- திருப்பூரில் நாளை, தங்களது நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றி, கருப்பு சட்டை அணிந்து வந்து கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள தொழில் துறையினருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

Update: 2023-10-08 12:55 GMT

Tirupur News- மின்சார கட்டணம் உயர்வு, பீக் ஹவர் கட்டண உயர்வு போன்ற பாதிப்புகளால் நாளை தொழில் துறையினர் கருப்பு சட்டை அணிந்து, தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடியேற்றி போராட்டம் நடத்த முடிவு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடந்தது.

கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் நிட்மா இணை செயலாளர் கோபி, டீமா தலைவர் முத்துரத்தினம், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலைவகித்தனர். திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று கலந்தாய்வு செய்தனர்.

மின்சார நிலை கட்டணம் உயர்வு, பீக் ஹவர் கட்டண உயர்வு, சூரியஒளி சக்தி மின் உற்பத்திக்கு கட்டணம் வசூலிப்பது ஆகியவை அனைத்து தொழில்துறையினரையும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. மின்கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி, தொழில்துறையினரின் நிலையை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து நாளை (9-ம் தேதி) காலை தொழில்துறையின் நிலை குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்க வரும் தொழில்ததொழில்துறையினர் கருப்பு பேட்ஜ் அல்லது கருப்பு சட்டை அணிந்து வர வேண்டும். அவரவர் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றி தொழில் பாதிப்பை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் வர வேண்டும். ஒவ்வொரு அமைப்பினரும் மின்கட்டண பாதிப்பு குறித்து மனுவில் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். அனைத்து அமைப்பினரும் ஒன்று சேர்ந்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தின் முன் அனைவரும் வர வேண்டும்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்து முதலமைச்சருக்கு அனுப்ப இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News