திருப்பூரில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருப்பூரில், நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதாக, மின்வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.;
இது தொடர்பாக, செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பில், திருப்பூர் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டம், திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில், நாளை (16ம் தேதி) காலை 11:00 மணிக்கு, குமார் நகர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. திருப்பூர் மின் பகிர்மானத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர், மின் வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என, அவர் தெரிவித்துள்ளார்.