புதிய பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றப்பட்ட சேலம், ஈரோடு பஸ்கள்
சேலம், ஈரோடு செல்லும் பஸ்கள் இன்று காலை முதல்,திருப்பூர் பி.என்.,ரோட்டில் உள்ள புது பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது.;
திருப்பூர் பேருந்து நிலையம் கோப்பு படம்.
சேலம், ஈரோடு செல்லும் பஸ்கள் இன்று காலை முதல்,திருப்பூர் பி.என்.,ரோட்டில் உள்ள புது பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது.
திருப்பூர் நொய்யல் ஆறு அருகில், யுனிவர்சல் தியேட்டர் ரவுண்டானா பகுதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட், கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஸமார்ட் சிட்டி திட்டத்தில், பழைய பஸ்ஸடாண்ட் புதுப்பிப்பு கட்டுமான பணி நடந்ததால், இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலம்,ஈரோடு, திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், நேற்றுவரை இயக்கப்பட்டது.நொய்யலாறு பகுதியி்ல் பாலம் கட்டும் பணியை, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை விரைவில் துவங்க உள்ளதால், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டு, புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்களை இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்றுமுதல், திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும் சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கடலுார், நெல்லை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சென்னை செல்லும் பஸ்கள், பி.என் ரோட்டில் இருந்து, புஷ்பா ஸ்டாப் வழியாக, ரயில்வே ஸ்டேசன், ஊத்துக்குளி ரோடு வழியாக இயக்கப்படுகிறது.
யுனிவர்சல் தியேட்டர் ரவுண்டானா பஸ் ஸ்டாண்ட் இனி செயல்படாத நிலையில், கலெக்டர் ஆபிஸ் பஸ் ஸடாண்ட், கோவில்வழி பஸ் ஸடாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.