குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்லப்பட்டாரா திருப்பூர் வாலிபர்? - சென்னை போலீசார் தீவிர விசாரணை

Tirupur News. Tirupur News Today- காதலியை தேடி சென்னை சென்ற திருப்பூர் வாலிபர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-04-17 09:20 GMT

Tirupur News. Tirupur News Today- காதலியை சந்திக்க சென்னை சென்ற வாலிபர், குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர். (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- திருப்பூரை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் (18 வயது). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசிக்கொண்டனர்.

இந்நிலையில் சஞ்சீவ்குமார் தனது பிறந்தநாளையொட்டி, காதலியை நேரில் சந்தித்து பேசுவதற்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு தனது காதலியுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். காதலிக்கு தேவையான பொருட்களையும் வாங்கி கொடுத்துள்ளார். இதனிடையே சஞ்ஜீவ்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து போலீசார் சஞ்ஜீவ்குமாரிடம் விசாரணை நடத்திய போது, தான் காதலியை தேடி சென்னைக்கு வந்ததாகவும், காதலி தந்த குளிர்பானத்தை குடித்ததில் இருந்து தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், குளிர்பானத்தில் விஷம் கலக்கப்பட்டதாகவும் மரண வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து சஞ்ஜீவ்குமாருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் சஞ்ஜீவ்குமார் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது காதலி யாரென்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக சஞ்ஜீவ்குமார் தனது காதலியுடன் சென்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதில் அவர் தனது காதலியுடன் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. அதனை வைத்து சிறுமியை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணை மூலம் சஞ்ஜீவ்குமார் மரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும் சஞ்ஜீவ்குமாரின் பெற்றோரும் தனது மகன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News