திருப்பூரில் அதிமுக வினர் மோதலால் பரபரப்பு

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் நடந்த அ.தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மோதல்- கைகலப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-10 01:21 GMT

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், திடீர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்திய கட்சி நிர்வாகிகள்.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாநகர் மாவட்டம், வடக்கு சட்டமன்றத் தொகுதி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் குமார்நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிச்சாமி, பல்லடம் தொகுதி எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக பேசி முடித்தவுடன், அந்தந்த வார்டு செயலாளர்களிடம் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார். அப்போது 25-வது வார்டு செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான தங்கராஜ் மாவட்ட செயலாளரிடம் படிவங்களை வாங்கிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் அதே வார்டை சேர்ந்த அ.தி.மு.க வைச் பழனிச்சாமி என்பவர் கவுன்சிலர் தங்கராஜை தள்ளிக்கொண்டு படிவங்களை வாங்க முயற்சி செய்தார். 

இதனால் தங்கராஜூக்கும் பழனிச்சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறும் நிலை உருவானது. இதனால் மேடையில் இருந்த எம்.எஸ்.எம்.ஆனந்தன், பழனிச்சாமியை கண்டித்தார். இதை தொடர்ந்து பழனிச்சாமியின் கோபம் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீது பாய்ந்தது. இதனால் பழனிச்சாமி ஆத்திரம் அடைந்து, எம்.எஸ்.எம்.ஆனந்தனையும், தங்கராஜையும் தாக்க முயன்றார். இதையடுத்து மேடையில் இருந்த முக்கிய நிர்வாகிகளும், அ.தி.மு.க.வினரும் பழனிச்சாமியை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதன் காரணமாக பிரச்னை, கைகலப்பாக மாறியது.

மேலும் கூட்டம் நடந்த அரங்கில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதை தொடர்ந்து பழனிச்சாமியுடன் வந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி, குண்டுக்கட்டாக அவரை அங்கிருந்து வெளியே தூக்கி சென்றனர். இதன் பின்னரே அங்கு அமைதியான சூழல் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. 25-வது வார்டு செயலாளரும், கவுன்சிலருமான தங்கராஜ் அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். அதில் திருப்பூர் குமார்நகரில் நடந்த அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் நானும், எனது வார்டை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டோம். அப்போது எஸ்.பி.நகரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் என்மீது மோதி, தகாத வார்த்தையால் திட்டினார். ஏன் என்மீது மோதினீர்கள் என்று கேட்டதற்கு, அவர் என்னை தகாத வார்த்தையால் திட்டியதுடன், கொலைமிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என, அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

திருப்பூரில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் நிர்வாகிகளிடையே கைகலப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்ட சம்பவம் அ.தி.மு.க.வில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News