திருப்பூரில் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்; அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
tirupur News, tirupur News today- திருப்பூர் மக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.;
tirupur News, tirupur News today- ஆய்வு கூட்டத்தில், 4 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையத்தில் வீடு ஒதுக்கீடு செய்தமைக்காக முன்வைப்பு தொகை கடனுதவியை அமைச்சர்கள் வழங்கினா்.
tirupur News, tirupur News today- திருப்பூர் மாவட்ட அனைத்துத்துறைகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை வகித்தனர். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து துறை செயல்பாடுகள் குறித்து முழுக்கவனம் செலுத்தி திட்டப்பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து ஆய்வு நடந்தது. வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம், மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பொதுப்பணித்துறை, கட்டிடங்கள், நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, காவல்துறை, வேளாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறையினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது,
பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு வசதி, மின்சாரம் உள்ளிட்ட தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தந்தால் மட்டுமே, அவர்கள் தினசரி சந்திக்கும் இந்த பிரச்னைகளில் இருந்து தப்பிக்க முடியும். சுகாதாரமான குடிநீர், தங்குடையின்றி வாகனங்களில் மக்கள் சென்று வர தரமான சாலைகள் வசதி, இரவு நேரங்களில் அச்சமின்றி சென்றுவர போதிய தெருவிளக்கு வசதிகள், தடையின்றி மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளில், மக்களுக்கு எந்த குறையும் வந்து விடக்கூடாது. அதற்கேற்ப, இந்த அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க முன் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.
அரசின் அனைத்து வளர்ச்சித்திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு திருப்பூர் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்ற வேண்டும். திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அரசின் திட்டங்களை, தரமான முறையிலும், விரைவாகவும் செய்து முடித்து, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியம். ஏனெனில், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும், அவர்களுக்கு உரிய காலத்தில் கிடைத்திடச் செய்வது மிக முக்கியம். அதற்கேற்ப, அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 4 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையத்தில் வீடு ஒதுக்கீடு செய்தமைக்காக முன்வைப்பு தொகை கடனுதவியை அமைச்சர்கள் வழங்கினா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.