திருப்பூரில் செயற்கையாக பழுக்க வைத்த, 2 டன் மாம்பழங்கள் அழிப்பு

Tirupur News. Tirupur News Today- திருப்பூரில், செயற்கை முறையில் பழுக்க வைத்த மற்றும் கெட்டுப்போன 2 டன் மாம்பழங்கள், அதிகாரிக்ள் ஆய்வில் கண்டறியப்பட்டு, அழிக்கப்பட்டது.

Update: 2023-04-27 15:01 GMT

Tirupur News. Tirupur News Today- மாம்பழங்கள் (கோப்பு படம்)

Tirupur News. Tirupur News Today- தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில்  அதிக அளவில் மா உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் மாம்பழங்கள் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்குச் செல்கின்றன. அதேபோல, மாங்கூழ் தொழிற்சாலைகளுக்கும் செல்கின்றன. இந்தாண்டு மா மரங்களில் நோய் தாக்கம், போதிய மழையின்மை காரணமாக பல இடங்களில் மாம்பழ மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மாம்பழ சீசன்  தொடங்கிய நிலையில், காதர், பீத்தர், அல்போன்சா, இமாம்பசந்த், சக்கரகுட்டி ஆகிய ரகங்கள் திருப்பூர் நகரப் பகுதியில் உள்ள பழக்கடைகள், நடைபாதை கடைகள், தள்ளுவண்டிக் கடைகளில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வியாபாரிகள் சிலர் லாப நோக்கத்துடன் செயற்கை முறையில் பழங்களைப் பழுக்க வைத்து விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாங்காய்கள் இயற்கையாகப் பழுக்க வைக்க  ஒரு வாரமாகும். ஆனால், வியாபாரிகளில் சிலா் மாங்காய்களை 2 நாள்களில் பழுக்க வைக்க ‘கால்சியம் காா்பைடு’ என்ற ரசாயனக் கல்லை பயன்படுத்துகின்றனா். இம்முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை உண்பவா்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இம்முறையில் பழுக்க வைக்கும் பழங்களை தற்போது, அதிகாரிகள் மற்றும் நுகா்வோர் எளிதில் கண்டறிவதால், ‘எத்திலின்’ ரசாயனப் பொடி மூலம் பழங்களைப் பழுக்க வைப்பது அதிகரித்துள்ளது.

இதனால், பழங்களை செயற்கையாக பழுக்க வைத்திருப்பதை எளிதாக கண்டறிய முடிவதில்லை. மேலும், பழங்களைப் பழுக்க வைக்க 100 பிபிஎம் எத்திலின் வாயுவை பயன்படுத்தலாம் என உணவுப் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அதே நேரம் எத்திலினை பொடியாகவோ, தண்ணீரில் கலந்தோ பயன்படுத்த அனுமதியில்லை. ஆனால், பொடி மூலம் பழங்களைப் பழுக்க வைப்பது அதிகரித்துள்ளது.

 திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பழக்கடைகளில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் வினீத் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 3 குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது 4 குடோன்களில் இருந்து  2 டன் அளவிலான வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மற்றும் கெட்டுப்போன மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி மூலம் அழிக்கப்பட்டது. மாம்பழங்களின் மொத்த மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும். இதுகுறித்து, 12 மொத்த விற்பனை கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News