பனியன் சரக்கு வாகனங்களுக்கு அபராதம் கூடாது; வணிகவரித்துறை அதிகாரிகளிடம் தொழில்துறை கோரிக்கை

Tirupur News. Tirupur News Today- வாகனங்களில் சரக்குகளை கொண்டு செல்லும்போது நியாயமான, குறைந்தபட்ச ஆவணங்கள் இருந்தாலும் அபாராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என, பனியன் தொழில் துறை சார்பில், வணிகவரித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

Update: 2023-04-06 17:07 GMT

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் சைமா அலுவலகத்தில், வணிகவரி குறித்த விளக்கக் கூட்டம் நடந்தது. (அடுத்த படம்) கூட்டத்தில் பங்கேற்ற தொழில் துறையினர்.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் சைமா சங்க அலுவலக அரங்கில், வணிகவரி குறித்த விளக்க கூட்டம் நடந்தது. சைமா சங்கச் செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் வரவேற்றார். தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.

இதில் ஈரோடு வணிகவரித்துறை இணை ஆணையாளர் காயத்ரி கிருஷ்ணன் பேசியதாவது,

வர்த்தகர்கள், தொழில்துறையினர் வரியினங்களை உரிய காலத்துக்குள் செலுத்த வேண்டும். சந்தேகம் இருந்தால் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். வரி செலுத்தாததால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க விரைவில் தாமதிக்காமல் வரி செலுத்த வேண்டும், என்றார்.

திருப்பூர் வணிக வரித்துறை துணை ஆணையாளர் முருககுமார் பேசுகையில், ஆர்.சி. எடுக்கும் தொழில் நிறுவனத்தினர் ஆண்டுதோறும் ரிட்டன் தாக்கல் செய்வது அவசியம். . 3 பி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.  9 சி மற்றும் 9 படிவத்தையும் தொடர்ந்து தாக்கல் செய்ய வேண்டும். நீங்கள் உரிய முறையில் வரி செலுத்தினாலும், நீங்கள் பொருட்களை விற்பனை செய்யும் மற்றும் பொருட்களை வாங்கும் நிறுவனத்தினரும் ரிட்டன் தாக்கல் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கும் அபராதம், வட்டி செலுத்தும் நிலை ஏற்படும், என்றார்.

ஈரோடு வணிகவரித்துறை துணை ஆணையாளர் மதன்குமார் பேசுகையில், தமிழக தொழிலாளர்கள் மட்டுமில்லாமல், வெளிமாநில தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக பனியன் தொழில் உள்ளது. அன்னிய செலாவணி அதிகம் கிடைக்கிறது. சரக்குகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது நிறுத்தி நாங்கள் சோதனை செய்யும்போது, அதிகம் பேருக்கு ஜி.எஸ்.டி. குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். வரியினங்கள் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும், என்றார். முடிவில் துணை தலைவர் பாலசந்தர் நன்றி கூறினார்.

இதில் சைமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டனர்.

முன்னதாக சைமா சங்கத்தினர் இணை ஆணையாளரிடம் அளித்த மனுவில், 'ஜாப் ஒர்க் பணிகளுக்காக வாகனங்களில் சரக்குகளை கொண்டு செல்லும்போது நியாயமான, குறைந்தபட்ச ஆவணங்களை கொண்டு செல்லும்போது வாகனத்தை பிடித்து, நிறுத்தி வைப்பதையும், அபாராதம் விதிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஜாப் ஒர்க் அடிப்படையில் செய்யப்படும் சாயப்பட்டறை கட்ட வேண்டிய வரியில் டி.டி.எஸ்.பிடித்தம் செய்து கட்டப்படவில்லை என பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு அறிக்கை வருகிறது. அதை ரத்து செய்ய வேண்டும். சி படிவம் சமர்ப்பிக்க முடியாத நேரத்தில் 1 சதவீதம் வரி செலுத்தியவர்களுக்கு நிலுவை அறிக்கை கேட்கப்படுவதை தவிர்க்க வேண்டும், என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News