திருப்பூரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
tirupur News, tirupur News today- திருப்பூர் குமரன் சிலை முன்பு, திமுக அரசை கண்டித்து, அதிமுக கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;
tirupur News, tirupur News today- திருப்பூரில், இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. (அடுத்த படம்) ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக கட்சியினர்.
tirupur News, tirupur News today- அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 5 பேர் மீது மதுரை அவனியாபுர காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை விமானநிலையத்தில் அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் என்பவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் 5 பேர் மீது மதுரை அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மதுரைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி விமான நிலைய பஸ்சில் செல்லும்போது, அவருக்கு எதிராக அமமுகவைச் சேர்ந்த நிர்வாகி ராஜேஸ்வரன், சமூக வலைதள நேரலையில் முழக்கங்கள் எழுப்பினார். இதனால் அதிமுக நிர்வாகிகள் அவரது மொபைலை வாங்கி விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரிடம் கொடுத்தனர், மேலும் அதிமுகவினர் சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து ராஜேஸ்வரன் தொடர்ந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 5 பேர் மீது மதுரை அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது
மேலும் பொது இடங்களில் அரசியல் கட்சி தலைவரை தாக்குவது போல் பேசுவது போன்ற புகாரின் அடிப்படையில், ராஜேஸ்வரன் மீது அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார் போலீசில் புகார் அளித்திருந்ததால், அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில், அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் சார்பில், இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் திருப்பூரில் இன்று குமரன் சிலை முன்பு, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் ஆனந்தன், விஜயகுமார், அமைப்புச் செயலாளர் சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் குணசேகரன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பழிவாங்கும் நடவடிக்கையாக தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும், அதிமுக. கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்தி, மக்கள் விரோத ஆட்சி நடைபெறுவதாக கூறி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதிச் செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கருணாகரன், மகேஸ்ராம், ஹரிஹரசுதன், மாணவரணி செயலாளர் சதீஷ், எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் தனபால், தொழிற்சங்கச் செயலாளர் கண்ணபிரான் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.