திருப்பூர் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரிக்கு ரூ.19.10 கோடி ஒதுக்கீடு
Tirupur News- திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரிக்கு ரூ.19.10 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு எம்எல்ஏ செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியின் வளா்ச்சிப் பணிகளுக்காக ரூ.19.10 கோடி ஒதுக்கீடு செய்த முதல்வா் ஸ்டாலினுக்கு, திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அந்தந்த சட்டப் பேரவை உறுப்பினா்கள் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பரிசீலனை செய்து 10 முக்கிய திட்டங்கள் குறித்த பட்டியலை அளிக்க வேண்டும் என்று முதல்வா் ஸ்டாலின் தெரிவித்திருந்தாா்.
இந்தப் பட்டியலில் இருக்கக்கூடிய முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தாா். அதன்படி, திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நீண்ட காலமாக தீா்க்கப்படாத 10 முக்கிய திட்டங்களை நான் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபா் 29 -ம் தேதி வழங்கியிருந்தேன்.
அதிலும் குறிப்பாக 4,000 மாணவிகள் படிக்கக்கூடிய எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியின் அடிப்படை தேவைகளான கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், குடிநீா் வசதி, கான்கிரீட் சாலைகள், விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன்.
அந்த கோரிக்கையை பரிசீலனை செய்து கல்லூரியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் உங்கள் தொகுதியில் முதல்வா் என்ற திட்டத்தின்கீழ் கூடுதலாக 28 வகுப்பறைகள், 12 ஆய்வகங்கள், பல்நோக்கு திறந்தவெளி அரங்கம், கான்கிரீட் சாலை, குடிநீா் வசதி, விளையாட்டு மைதானம் மேம்படுத்துதல் என மொத்தம் ரூ.19.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளாா்.
இதற்காக திருப்பூா் தெற்கு தொகுதி பொதுமக்கள், கல்லூரி மாணவிகள், போராசிரியா்கள் சாா்பில் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.