திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில் ஹீமோபீலியா தடுப்பூசி

Hemobilia- திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரியில், 'ஹீமோபீலியா' தடுப்பூசி செலுத்த, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.;

Update: 2022-07-30 06:10 GMT

திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரியில், 'ஹீமோபீலியா' தடுப்பூசி செலுத்த, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.

Hemobilia- சிலருக்கு ரத்த உறைதல், அணு குறைபாடு காரணமாக ஹீமோபீலியா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இவர்களுக்கு உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் திடீர் ரத்த கசிவு ஏற்பட்டாலோ, அடிபட்டு ரத்தம் வந்தாலோ, ரத்தம் உடனடியாக உறையாது. திருப்பூர் மாவட்டத்தில் இதற்கான போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக கோவை அல்லது வேலுார் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றனர்.

தற்போது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை, உணவு மருந்து கட்டுப்பாடு கழகம், திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரிக்கு முதன்முறையாக, ஹீமோபீலியா தடுப்பூசியை அனுப்பி வைத்துள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி அதிகாரிகள் கூறுகையில், ஹீமோபீலியா நோயாளிகளுக்கு திடீர் ரத்தகசிவு ஏற்பட்டால், உடனடியாக செலுத்த வேண்டிய 'பேக்டர் 8 மற்றும் பேக்டர் 9' தடுப்பூசி அரசு தரப்பில் இருந்து வழங்கப்பட்டது. இனி, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகள், இங்கேயே தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இதற்காக மருத்துவ ஆலோசனை வழங்க டாக்டர், செவிலியர் என, ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, என்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News