திருப்பூர் மாநகராட்சியில், சாலையோர வியாபாரிகள் கடன் பெற சிறப்பு முகாம்

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாநகராட்சியில் 10-ம் தேதி சாலையோர வியாபாரிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம். அதற்காக, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

Update: 2023-08-06 14:53 GMT

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் கடன் பெற சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. (கோப்பு படம்) 

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாநகராட்சியில் 10-ம் தேதி சாலையோர வியாபாரிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் கூறியிருப்பதாவது, 

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம், நடக்கிறது. வருகிற 10-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநகராட்சி மைய அலுவலகத்தில், இந்த சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கடன் பெறலாம். அதை குறைந்தபட்சம் 10 மாதங்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும். 2-வது கடன் ரூ.20 ஆயிரம் பெறலாம். அதை குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தினால் 3-வது கடனாக ரூ.50 ஆயிரம் பெறலாம். அதை வங்கிகள் மூலம் வழங்கப்படும் காலத்துக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

தகுதியானவர்கள் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை பெற்று திருப்பூர் அவிநாசி ரோடு பங்களா ஸ்டாப் மற்றும் வாலிபாளையம் மாநகராட்சி பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 99440 54060 என்ற செல்போன் எண்ணிலும் தகவல் பெறலாம் என, திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News